திக் திக் திக்… இப்படியா படகில ஏத்துவாங்க.. கொஞ்சம் தவறினாலும் அவ்வளவுதான்… நெஞ்சை பதற வைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திக் திக் திக்… இப்படியா படகில ஏத்துவாங்க.. கொஞ்சம் தவறினாலும் அவ்வளவுதான்… நெஞ்சை பதற வைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

பீகாரில் கங்கை நதியின் சீற்றமான அலைகளுக்கு இடையே பயணிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிரப்பப்பட்ட படகு ஒன்று பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘Magadh Updates’ என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், கங்கையின் நடுவே ஆபத்தான முறையில் படகு தள்ளாடியபடி செல்வதைக் கண்டு நெட்டிசன்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

அந்த வீடியோவில், படகில் ஏராளமான பயணிகள் நெருக்கமாக அமர்ந்தும் நின்றுகொண்டும் இருப்பது தெரிகிறது. பயணிகள் மட்டுமின்றி பல டஜன் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களும் படகில் அடுக்கப்பட்டுள்ளன. கங்கை நதி பரந்து விரிந்து காணப்படும் அந்தப் பகுதியில், எழும் பலத்த அலைகள் படகின் பக்கவாட்டில் மோதும் போது படகு இருபுறமும் பயங்கரமாகச் சாய்ந்து தள்ளாடுகிறது. படகைக் கட்டுப்படுத்துவதே மிகவும் கடினமாக இருப்பது போலக் காட்சியளிக்கிறது.

Advertisement

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, படகில் பயணித்த யாருமே ‘லைஃப் ஜாக்கெட்’ அணியவில்லை என்றும், எந்தவொரு அடிப்படை பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். தினசரி நதியைக் கடக்கும் இந்த மக்களுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஏன் பாலம் கட்டப்படவில்லை என்றும், மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இவ்வாறு பயணிப்பது கவலையளிப்பதாகவும் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in