CRIME
“என்னை கல்யாணம் பண்ணிக்கோ..” என மிரட்டிய காதலி.. உடலை துண்டு துண்டாக வெட்டிய கள்ளக்காதலன் செய்த வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் பின்ணணி..!!
அனுமகோண்டா மாவட்டம் ஹசன்பர்த்தி பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னா என்ற 40 வயது பெண், தனது கள்ளக்காதலனைத் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்த பிறகு தனது பெற்றோருடன் வசித்து வந்த ஸ்வப்னாவிற்கு, பெல்லாரியில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றபோது பசவராஜ் என்ற ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. நாளாக நாளாகத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ஸ்வப்னா வற்புறுத்தியுள்ளார். அதற்கு பசவராஜ் மறுக்கவே, தங்களின் ரகசியப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக ஸ்வப்னா மிரட்டியுள்ளார். இதனால் தனது அவமானத்திற்குப் பயந்த பசவராஜ், ஸ்வப்னாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த மே 15 அன்று ஸ்வப்னாவை பெல்லாரிக்கு வரவழைத்த பசவராஜ், அங்குள்ள சித்தேஸ்வரா கோவில் அருகே வைத்து அவரை கொடூரமாகக் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். மேலும், எவ்வித ஆதாரமும் சிக்கக் கூடாது என்பதற்காக ஸ்வப்னாவின் ஆடைகளை எரித்து, அவரது செல்போனை ஒரு குளத்தில் வீசியுள்ளார். இதற்கிடையே, மகளைக் காணவில்லை என்று மே 31 அன்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத்தை வைத்து போலீசார் பசவராஜைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
