CRIME
“என் பேச்சை கேட்க மாட்டியா..?” கதவைத் திறந்து கொண்டு வந்த காதலன்.. இரத்த வெள்ளத்தில் அலறிய இளம்பெண்.. அலறி அடித்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்.. பதறவைக்கும் பின்னணி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏலூரு மாவட்டம் ஜங்காரெட்டிகுடெம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பேக்கரி பெண் ஊழியரை, அவரது காதலன் ராமகிருஷ்ணா என்பவர் கத்தியால் கொடூரமாகக் குத்திய நெஞ்சைப் பதறவைக்கும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. போளவரம் மண்டலம் தங்கேடிகொண்டா கிராமத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண், உள்ளூரில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது வீட்டில் தனியாக இருந்ததைச் சாதகமாக்கிக் கொண்ட ராமகிருஷ்ணா, திடீரென வீட்டிற்குள் புகுந்து அந்தப் பெண்ணை ரக்கமற்ற முறையில் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஜங்காரெட்டிகுடெம் காவல்துறையினர், தப்பியோடிய காதலன் ராமகிருஷ்ணாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
