“என்னை வாழ விடமாட்டாங்க…!” தம்பியிடம் உருக்கமாகப் பேசிவிட்டு வாலிபர் எடுத்த அதிரடி முடிவு.. காதலி குடும்பம் கொடுத்த டார்ச்சரால் நேர்ந்த கொடூரம்.. நடுங்கவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை வாழ விடமாட்டாங்க…!” தம்பியிடம் உருக்கமாகப் பேசிவிட்டு வாலிபர் எடுத்த அதிரடி முடிவு.. காதலி குடும்பம் கொடுத்த டார்ச்சரால் நேர்ந்த கொடூரம்.. நடுங்கவைக்கும் பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அஜ்ஜரகடு மாவட்ட அரசு மருத்துவமனையில், காதல் தகராறு காரணமாகப் பெண் ஒருவரின் குடும்பத்தினரால் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கப்பட்ட பிரதீப் பூஜாரி (27) என்ற வாலிபர், தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று மாலை 5:30 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடுப்பி பெருடூர் நாயர்கோடி பகுதியைச் சேர்ந்தவரான பிரதீப் பூஜாரி, இந்து ஜாகரன் வேதிகே அமைப்பில் தீவிரமாக இயங்கி வந்தவர் என்றும், ஷ்ரவ்யா ஷெட்டி என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகாரின்படி, கடந்த அக்டோபர் 27 அன்று இரவு 10 மணியளவில் பிரதீப் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் சகோதரர்களான பிரசன்னா ஷெட்டி, சுதிர் ஷெட்டி, சைலேஷ் ஷெட்டி உள்ளிட்டோர் 3 கார்களில் வந்து அவரை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளனர். அங்கு பிரசன்னா ஷெட்டி பிரம்பாலும், மற்றவர்கள் மரக்கட்டைகளாலும் பிரதீப்பின் முதுகு மற்றும் கால்களில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தகவலறிந்து பிரதீப்பின் நண்பர்கள் அங்கு திரண்டதால் தாக்குதல் நிறுத்தப்பட்டது. படுகாயமடைந்த பிரதீப், அக்டோபர் 28 அன்று உடுப்பி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தம்மைக் கொடூரமாகத் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகத் தனது சகோதரரிடம் அவர் உருக்கமாகப் பகிர்ந்து கொண்ட சில மணி நேரங்களிலேயே இந்தத் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

Advertisement

இந்தச் சம்பவம் குறித்து பிரதீப்பின் சகோதரர் திலீப் குமார் அளித்த புகாரின் பேரில், உடுப்பி நகர காவல்துறையினர் காதலி ஷ்ரவ்யா ஷெட்டி, பிரசன்னா ஷெட்டி உட்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது பாரதிய நியாய சன்ஹிதாசட்டப்பிரிவுகள் 108 மற்றும் 190-ன் கீழ் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, தன்னைத் திருமணம் செய்யக் கோரி பிரதீப் தொடர்ந்து தொல்லை தருவதாக அந்தப் பெண் அளித்த புகாரில் ஹிரியாத்கா போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருந்தார் என்பதும், கடந்த 2025 நவம்பரில் உடுப்பி மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றும் பதியப்பட்டிருந்தது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தற்கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உடுப்பி காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in