“ஃப்ரீயா தர்றாங்கன்னு போட்டோ எடுக்காதீங்க” 80s விண்டேஜ் போட்டோ ஆசை… ரெட்ரோ ஸ்டைல் ஏஐ போட்டோக்களுக்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஃப்ரீயா தர்றாங்கன்னு போட்டோ எடுக்காதீங்க” 80s விண்டேஜ் போட்டோ ஆசை… ரெட்ரோ ஸ்டைல் ஏஐ போட்டோக்களுக்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை..!!

Published

on

சமூக வலைத்தளங்களில் தற்போது 1980களின் ‘ரெட்ரோ ஸ்டைல்’ புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சிகை அலங்காரம், ஆடைகள், ஸ்டூடியோ பின்னணி உள்ளிட்ட அம்சங்களுடன் தங்களது புகைப்படங்களை மாற்றி பலரும் பதிவிட்டு ‘டிரெண்டிங்’ ஆக்கி வருகின்றனர். இதற்காக பெரிய அளவில் எந்த முயற்சியும் தேவையில்லை. சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளில் புகைப்படத்தை பதிவேற்றிவிட்டு, 1960களின் ஸ்டைலில் மாற்றி அமைக்கும்படி கட்டளையிட்டால் போதும். சில ஏ.ஐ. கருவிகளே அதற்கான ‘பிராம்ப்ட்’-ஐ வழங்குகின்றன. இதனால் ஒரே நபர் ஏராளமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் உலவ விட்டு வருகின்றனர். ஆனால், இலவசமாக உருவாக்கப்படும் இந்த புகைப்படங்களுக்கு பின்னால் மிகப்பெரிய அளவிலான மின்சாரம், தண்ணீர் மற்றும் தொழில்நுட்ப வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு புகைப்படத்தை ஏ.ஐ. மூலம் உருவாக்கும்போது முதலில் அது சர்வருக்கு அனுப்பப்படுகிறது. அங்கு நெட்வொர்க் மற்றும் சேமிப்பு வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்பிறகு, புகைப்படத்தில் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரான உள்ளடக்கம் உள்ளதா என்பது பரிசோதிக்கப்படுகிறது. தொடர்ந்து, புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கம்ப்யூட்டிங் செயல்முறை தொடங்குகிறது. இதற்காக சக்திவாய்ந்த பிராசசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதுடன் வெப்பத்தையும் உருவாக்குகின்றன. இந்த வெப்பத்தை கட்டுப்படுத்த தரவு மையங்களில் குளிரூட்டும் அமைப்புகள் செயல்படுகின்றன. இதற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.

Advertisement

ஏ.ஐ. நிறுவனத்தின் இரண்டு வெவ்வேறு மென்பொருட்கள் அல்லது செயலிகள் ஒன்றுக்கொன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் செயலி நிரலாக்க இடைமுகம் விலையை அடிப்படையாகக் கொண்டால், 1024×1024 பிக்சல் அளவிலான அதாவது 27×09 செமீ. என்ற சமச்சீர் அளவிலான 10 குறைந்த தரத்திலான ஏ.ஐ. படங்களை உருவாக்க சுமார் ரூ.10, நடுத்தர தரத்திலான 10 படங்களுக்கு சுமார் ரூ.36, உயர்தர 10 படங்களுக்கு சுமார் ரூ.142 செலவாகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது ஏ.ஐ. நிறுவனங்களின் அடிப்படை செலவு மட்டுமே. மின்சாரம், தண்ணீர், பாதுகாப்பு உள்ளிட்ட பிற செலவுகள் இதில் அடங்காது. ஏ.ஐ. மூலம் ஒரு புகைப்படத்தை உருவாக்க சுமார் 1.2 வாட் மின்சாரம் பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஒரு நபர் ஒன்று அல்லது இரண்டு படங்களை உருவாக்குவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஏ.ஐ. புகைப்படங்களை உருவாக்கும்போது அதன் மொத்த தாக்கம் அதிகரிக்கிறது. ஏ.ஐ. பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மின்சாரம் மற்றும் தண்ணீர் தேவையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in