“எங்களை மதிக்கல… அரசியல் தலையீடு இருக்கு..” மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் வெடித்த சர்ச்சை..! குற்றச்சாட்டும் அறங்காவலர்கள்.. மறுக்கும் அமைச்சர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்களை மதிக்கல… அரசியல் தலையீடு இருக்கு..” மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் வெடித்த சர்ச்சை..! குற்றச்சாட்டும் அறங்காவலர்கள்.. மறுக்கும் அமைச்சர்..!!

Published

on

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் அரசியல் தலையீடு இருப்பதாக அறங்காவலர் குழு குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள கும்பாபிஷேக விழா தொடர்பாக கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் சீனிவாசன், சுப்புலட்சுமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்துக்கு பிறகு தொன்மை மாறாமல் கோவிலை புனரமைக்கும் பணியை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் வழிகாட்டுதலின்படி சிறப்பாக செய்து வந்தோம். ஆனால் கும்பாபிஷேக விழா அழைப்பிதழில் எங்களின் பெயர் புறக்கணிக்கப்பட்டு, அது நீதிமன்ற அறிவுறுத்தல் வரை சென்று பேசுபொருளானது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எங்களை எந்த செயல்பாட்டிலும் கலந்து ஆலோசிக்காமல், கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் தன்னிச்சையாகவும் அரசியல் தலையீடு கொண்டதாகவும் உள்ளன.

அனுமதி அட்டைகள் (பாஸ்) வழங்குவதில் தினமும் மாறுபட்ட தகவல்கள் வருகின்றன என்றும், நன்கொடைதாரர்கள் மற்றும் உபயதாரர்களுக்காக நாங்கள் தயாரித்த பட்டியலை கோவில் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை என்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர். 1963-ம் ஆண்டு பி.டி.ராஜன் தலைமையில் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று, மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றிய குடும்பத்தின் வழி வந்த நாங்கள் என்றைக்குமே அரசியலையும், ஆன்மிகத்தையும் இணைத்துப் பார்த்ததில்லை எனத் தெரிவித்த அவர்கள், ஆன்மிகத் திருப்பணிகளில் அரசியல் கலந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டனர்.

Advertisement

இந்நிலையில், அறங்காவலர் குழுவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அறங்காவலர்களின் செயல்பாடுகளைத் தடுக்கவில்லை; அவர்களின் தேவை என்ன என்பது அதிகாரிகள் மூலம் கேட்டறியப்படும். பாஸ் விவகாரங்களில் யாரும் தலையிடவில்லை, பக்தர்களுக்கு 2,000 பாஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வரும் வழிகளில் ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகிறதுடன், பொதுப்பணித்துறையினரின் ஆய்வின் அடிப்படையில் நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in