“தி.மு.க, அ.தி.மு.க ரெண்டுமே மக்களுக்கு விரோதம்…” இடைத்தேர்தல் வெற்றிக்கு பின் அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தி.மு.க, அ.தி.மு.க ரெண்டுமே மக்களுக்கு விரோதம்…” இடைத்தேர்தல் வெற்றிக்கு பின் அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்..!!

Published

on

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றியை உறுதி செய்துள்ளது. இதையடுத்து த.வெ.க. தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இது த.வெ.க. அரசின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் கிடைத்திருக்கும் வெற்றியானது, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தனர். அதனை தொடர்ந்து இன்று அ.தி.மு.க. இருக்கும் நிலையை உணர்ந்து அக்கட்சியில் இருந்து பலர் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க.வில் இணைந்து இடைத்தேர்தலை சந்தித்தனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் த.வெ.க. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நல்லாட்சி வரும் காலங்களில் கண்டிப்பாக தொடரும். மக்கள் தெளிவாக இருக்கின்றனர். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழகத்திற்கு விரோதமான கட்சிகள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் த.வெ.க. வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். மக்கள் விரும்பும் அரசாக த.வெ.க. அரசு இருக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in