LATEST NEWS
“ஸ்டாலின் பேசிய ‘அந்த’ ஒரே ஒரு வார்த்தை..” திமுக-வின் இறுதி நேரப் பின்னடைவுக்கு இதுதான் காரணமா..? நெட்டிசன்கள் உடைக்கும் ரகசியம்.. ணையத்தை உலுக்கும் விவாதம்..!!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவுக்குக் காலையில் அ.தி.மு.க-வும், பிற்பகலில் தி.மு.க-வும் மிகக் கடுமையான ஆட்டம் காட்டி நெருக்கடி கொடுத்த விபரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய தொடக்கத்தில் 4-வது சுற்று முடியும் வரை அ.தி.மு.க வேட்பாளர் பானுமதி அதிரடியாக முதலிடத்தில் நீடித்து தவெக-வை முந்தினார். அதன் பின்னர் நிலைமை மாறி தவெக முன்னிலைக்கு வந்தாலும், பிற்பகல் சுற்றுகளில் தி.மு.க வேட்பாளர் சுகன்யா அசுர வேகத்தில் வாக்குகளை வாரிக் குவித்து, தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு இறுதிவரை மூச்சுமுட்ட வைக்கும் அளவுக்குக் கடுமையான டஃப் ஃபைட் கொடுத்தார்.
இதற்கிடையே, தேர்தல் பிரசாரக் களத்தின் போது தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய சில சர்ச்சைக்குரிய தனிப்பட்ட விமர்சனங்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் கிடைத்து வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி இருக்கலாம் எனச் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் தற்பொழுது விவாதித்து வருகின்றனர். ஸ்டாலினின் அந்தப் பேச்சு மக்கள் மத்தியில் குறிப்பாகப் பெண் வாக்காளர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியதே தி.மு.க-வின் இந்த இறுதி நேரப் பின்னடைவுக்குக் காரணம் என்றும், அதுவே தவெக அனுதாப வாக்குகளாக மாற வழிவகுத்தது என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். திராவிடக் கட்சிகளின் இந்த மிரட்டலான ஆட்டத்தையும் தாண்டி தவெக தாராபுரத்தைக் கைப்பற்றியிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
