“அடிச்சு கொடுமைப்படுத்துறாங்க.. காப்பாத்துங்க விஜய் அண்ணா..!” மலேசியாவிலிருந்து கதறிய தமிழக இளைஞர்.. வைரலாகும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடிச்சு கொடுமைப்படுத்துறாங்க.. காப்பாத்துங்க விஜய் அண்ணா..!” மலேசியாவிலிருந்து கதறிய தமிழக இளைஞர்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

Published

on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹாருன் என்ற இளைஞர், வாழ்வாதாரத்திற்காக மலேசியாவில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு வேலைக்குச் சேர்ந்தது முதல் ஓட்டல் உரிமையாளர் தன்னைத் தொடர்ந்து மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்துவதாகவும், முறையான ஊதியம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் அனுபவித்து வரும் இந்த சித்திரவதைகளில் இருந்து தன்னை எப்படியாவது மீட்க வேண்டும் என்று அந்த வீடியோவில் அவர் கதறி அழுதுள்ளார்.

இந்த நிலையில், தங்களைக் காப்பாற்றும்படி தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஹாருன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். “சகோதரர் விஜய்.. நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்.. அவர் எங்களை அடித்துத் துன்புறுத்துகிறார்.. சம்பளம் வீட்டிற்கு அனுப்புவதில்லை.. எங்கள் கல்வியைச் சீரழிக்கிறார், சகோதரா..” என்று அவர் அழுதுகொண்டே பேசியுள்ள இந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு மலேசியாவில் தவிக்கும் ஹாருனைப் பத்திரமாகத் தாயகம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in