பகீர்..! ஆதவ் அர்ஜுனா என்கிட்ட வந்து அந்த பதவியை கேட்டார் .. ஆனால் அதை சொல்லி மறுத்துட்டேன்… ரகசியங்களை அம்பலப்படுத்திய இபிஎஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்..! ஆதவ் அர்ஜுனா என்கிட்ட வந்து அந்த பதவியை கேட்டார் .. ஆனால் அதை சொல்லி மறுத்துட்டேன்… ரகசியங்களை அம்பலப்படுத்திய இபிஎஸ்..!!

Published

on

சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தன்னிடம் வந்து அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி கேட்டதாக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜுனாவின் முந்தைய அரசியல் நகர்வுகளை விமர்சிக்கும் வகையில் இபிஎஸ் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா முதலில் திமுகவில் இருந்ததாகவும், பின்னர் விசிகவிற்குச் சென்றுவிட்டுத் தன்னை வந்து சந்தித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் அதிமுகவின் உயரிய பதவியைக் கேட்டபோது, ‘அதிமுகவில் பதவிகள் விற்பனைக்கு அல்ல; உழைப்பவர்களுக்கு மட்டுமே இங்குப் பதவி கிடைக்கும்’ என்று கூறி தாம் மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே அவர் தவெகவிற்குச் சென்று அந்தக் கட்சியைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக இபிஎஸ் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.

Advertisement

மேலும், தவெகவின் தற்போதைய ஆட்சி ஒரு விபத்தால் ஏற்பட்டது என்றும், பதவிக்கு வந்ததில் இருந்தே என்ன பேசுவதென்று தெரியாமல் அவர்கள் தலைகால் புரியாமல் பேசி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட பொன்விழா கண்ட கட்சியான அதிமுகவை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை எனக் கூறிய அவர், அதிமுக அரசின் முந்தைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி தவெக அரசு மகிழ்ந்து கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in