LATEST NEWS
இது என்ன கொடுமை.. ஆபாச படம் எடுத்து மிரட்டி ஓராண்டு பாலியல் வன்கொடுமை.. சட்டத்தை மதிக்காமல் கட்ட பஞ்சாயத்து செய்த அதிர்ச்சி முடிவு..! 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!!
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஷீஷ்கர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், சட்ட ஒழுங்கையும் போக்சோ சட்டத்தையும் புறக்கணிக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அச்சுறுத்தி, அவளது ஆபாசப் படங்களை எடுத்து வைத்துள்ளார். அந்தப் படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, கடந்த ஓராண்டாக அச்சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பயந்துபோயிருந்த சிறுமி குடும்பத்தினரிடம் உண்மையைக் கூறிய நிலையில், அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று முறையிட்டபோது, அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்ததைத் தொடர்ந்து, கிராமத்துப் பிரமுகர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் முன்னிலையில் ஒரு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அந்த பஞ்சாயத்தில் இரு குடும்பத்தினர் மீதும் அழுத்தம் கொடுக்கப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கூடாது என கட்டாய பஞ்சாயத்து சமரசம் செய்யப்பட்டது. திங்கள்கிழமை அன்று பஞ்சாயத்தின் உத்தரவின்படி, சிறுமிக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் முறைப்படி ‘ரோகா-டீகா’ நடத்தப்பட்டு, சிறுமிக்கு 18 வயது பூர்த்தியடைந்ததும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கே திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்திய நியாய சன்ஹிதா மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ், பாலியல் வன்கொடுமை போன்ற ஜாமீனில் வர முடியாத தீவிர குற்றங்களில் இதுபோன்ற பஞ்சாயத்து சமரசங்களுக்கு எவ்வித சட்டப்பூர்வ செல்லுபடியும் இல்லை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சட்டவிரோத சமரசத்தை ஏற்படுத்திய பஞ்சாயத்தார்கள் மற்றும் இடைத்தரகர்கள் என 12 பேர் மீது காவல் துறை விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து இதுவரை தங்களுக்கு எழுத்துப்பூர்வ புகார் எதுவும் கிடைக்கவில்லை என்றும், புகார் மனு பெறப்பட்டால் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷீஷ்கர் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
