“குழந்தையை தாங்க நான் பார்த்துக்கிறேன்..” கார்டை எடுத்துட்டு வந்து பார்த்த தந்தைக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. மர்ம பெண் செய்த பகீர் காரியம்.. சிசிடிவியில் சிக்கிய காட்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“குழந்தையை தாங்க நான் பார்த்துக்கிறேன்..” கார்டை எடுத்துட்டு வந்து பார்த்த தந்தைக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. மர்ம பெண் செய்த பகீர் காரியம்.. சிசிடிவியில் சிக்கிய காட்சி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மர்மப் பெண்ணால் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கு அருகே தனது குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதற்காகத் தந்தை காத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு பெண், குழந்தைக்குத் தடுப்பூசி போட உதவுவதாகக் கூறி குழந்தையைத் தன் மடியில் வாங்கியுள்ளார். பின்னர், தடுப்பூசி அட்டையை எடுத்து வருமாறு தந்தையை வெளியில் அனுப்பியுள்ளார். அதனை நம்பி தந்தை அட்டையை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தபோது, அந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு இல்லை.

மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்காததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வெள்ளை நிற ஆடை அணிந்த பெண் ஒருவர், பச்சிளம் குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறும் அதிர்ச்சி தரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இக்காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையைத் திருடிச் சென்ற அந்த மர்மப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in