LATEST NEWS
“பொதுவேட்பாளரை களமிறக்கலாம்” திமுக-அதிமுக போட்ட ‘அந்த’ ரகசிய உடன்பாடு… உண்மையை போட்டுடைத்த அமைச்சர் நிர்மல்குமார்.. அலறும் அரசியல் வட்டாரம்…!!
தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களுக்கு இதனால் எந்தவொரு பின்னடைவும் இல்லை என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், தற்போதைய அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக நடைபெற்ற பொதுத்தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நகர்வுகளை ஒப்பிட்டு, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் எதிராக அவர் பல்வேறு அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க ஈபிஎஸ் தீவிரமாக முயன்றார், இதனால் அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அதிமுக தலைமையின் இந்த சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாட்டின் காரணமாகவே, அதிருப்தியடைந்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் பலம் கொண்ட தவெக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக-வின் எழுச்சியை எதிர்கொள்ள முடியாமல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் திரைமறைவில் கைகோர்த்து, தங்களுக்குள் ஒரு ‘பொது வேட்பாளரை’ நிறுத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் அம்பலப்படுத்தினார். அவ்வாறு ஒரே வேட்பாளரை நிறுத்த சதித் திட்டம் தீட்டிய பின்னர்தான், தற்போது வேறு வழியின்றி தங்களது தேர்தல் உத்திகளை அவர்கள் மாற்றிக் கொண்டுள்ளனர் என்று நிர்மல்குமார் தனது உரையில் மிகக் கடுமையான விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
