LATEST NEWS
“பிள்ளைகள் யாரும் தங்களைப் பெத்துக்கச் சொல்லிக் கேட்கல..!” பெற்றோர்களின் முகத்தில் அடித்தாற்போல் பேசிய 65 வயது பாட்டி.. இளைஞர்களின் நெஞ்சைக் கவர்ந்த வீடியோ..!!
இன்ஸ்டாகிராமில் ‘தாய் சாவித்திரி’ என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஹரியானாவைச் சேர்ந்த 65 வயது பாட்டி ஒருவர், தற்காலப் பெற்றோருக்கு வழங்கிய ஆழமான அறிவுரை வீடியோ சமூக வலைதளங்களில் மில்லியன்கணக்கான வியூஸ்களை அள்ளிக் குவித்து இளைஞர்களின் இதயங்களை வென்றுள்ளது. “குழந்தைகளை மனரீதியாகத் துன்புறுத்தாதீர்கள். உங்களை ஒன்பது மாதங்கள் வயிற்றில் சுமந்து வளர்த்தேன் என்று கூறி அவர்களை எதற்கும் எமோஷனல் பிளாக்மெயில் செய்யாதீர்கள்” என்று அந்தப் பாட்டி பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “உங்களுக்குக் குழந்தை வேண்டும் என்ற ஆசையில்தான் நீங்கள் அவர்களைப் பெற்றெடுத்தீர்கள், மாறாகப் பிள்ளைகள் யாரும் தங்களைப் பெற்றெடுக்குமாறு உங்களிடம் கேட்கவில்லை” என்று அவர் தற்காலப் பெற்றோரின் சிந்தனையைத் தூண்டும் வகையில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
https://www.instagram.com/reel/Ddnqr0bzxCp/?utm_source=ig_embed&ig_rid=ATtRLcBWJ6m5GvJxFmp2Piq
பெற்றோர்கள் தங்களது நிறைவேறாத ஆசைகளையும் கனவுகளையும் பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள சாவித்திரி பாட்டி, “உங்கள் பெயரை நீங்களே உங்களது உழைப்பால் பிரகாசிக்கச் செய்திருக்க வேண்டும்; அதை விடுத்துப் பிள்ளைகள் உங்களது இஷ்டப்படிதான் சாப்பிட வேண்டும், திருமணம் செய்ய வேண்டும், உங்கள் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள்” என்று கூறியுள்ளார். புதிய தலைமுறையினரைத் தங்களது சொந்தக் கனவுகளுடன் சுதந்திரமாக வாழ விடுங்கள் என்றும், அவர்களுக்குரிய தனிப்படை உரிமைகளை வழங்குங்கள் என்றும் அவர் பெற்றோர்களுக்குப் புத்திமதி கூறியுள்ளார். சுமார் 1 கோடியே 83 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வரும் வேளையில், தங்களது வீட்டில் இந்த வீடியோவைக் காட்டியபோது அது ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்று பெற்றோர் மறுப்பதாகப் பிள்ளைகள் சிலர் கலகலப்பாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
