LATEST NEWS
மரகதம் குமரவேலை பக்கத்துல வச்சிக்கிட்டே… எப்படி கூச்சமே இல்லாம அப்படி பேச முடியுது..?விஜய்யின் கூடாரத்தை உலுக்கிய ஸ்டாலினின் ஒற்றைக் கேள்வி..!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் . படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறிவிட்டு, விஜய் மக்கள் முன்னிலையில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார் என்று ஸ்டாலின் சாடியுள்ளார். விஜய்யின் அரசியல் பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் வெறும் அற்ப அரசியல் ஆதாயத்திற்கானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டதாகக் கூறப்படும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக் கொண்டே, ‘தமிழக வெற்றிக் கழகம் தூய சக்தி, திமுக தீய சக்தி’ என்று விஜய்யால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவின் இந்த அரசியல் நகர்வுகள் அதன் கொள்கை முரண்பாடுகளைக் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், விஜய்யின் இந்த கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து தானோ அல்லது திமுகவோ எந்தவித அற்ப அரசியல் ஆதாயமும் தேட முயலவில்லை என்று மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் . விஜய்யின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த எக்ஸ் பதிவு தமிழக அரசியலில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
