CRIME
“கீழே விழுந்து செத்துட்டாரு சார்” இரவில் கொடூர கொலை… காலையில் கணவர் பக்கத்தில் படுத்து நாடகமாடிய மனைவி… நடந்தது என்ன..? புட்டு புட்டு வைத்த போலீஸ்..!!
கோவை அருகே பூலுவப்பட்டி மெட்டுவலவு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஆறுச்சாமி (42) என்பவர், கடந்த 1-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மனைவி ரேவதி, தனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்தபோது டைல்ஸ் கல் குத்தி இறந்துவிட்டதாகக் கூறி போலீசாரிடம் நாடகமாடியுள்ளார். இதனை நம்பிய ஆலாந்துறை போலீசார் முதலில் இதனை மர்மச் சாவு என்றே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இருப்பினும், ஆறுச்சாமியின் உடற்கூறாய்வு அறிக்கை அண்மையில் வெளியானபோது இந்த வழக்கின் உண்மை அம்பலமானது. ஆறுச்சாமியின் மார்பில் கூர்மையான ஆயுதத்தால் பலமாகத் தாக்கப்பட்ட காயங்கள் இருந்ததாகவும், அது விபத்து அல்ல, கொலை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் ரேவதியிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் தனது கணவரைக் கத்தியால் குத்திக்கொன்றதை ஒப்புக்கொண்டார். ஆறுச்சாமி தினமும் மது குடித்துவிட்டுத் தன்னைப் பலமாகத் தாக்கியதால் ஆத்திரமடைந்து இந்த கொலையைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்; தற்பொழுது ரேவதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
