#BREAKING : பள்ளி மாணவர் அகிலன் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்..!! – cinefeeds
Connect with us

CRIME

#BREAKING : பள்ளி மாணவர் அகிலன் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

Published

on

கோவையில் பள்ளி மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் போலீசாரின் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மாணவனின் பெற்றோரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர் கோரிக்கை மற்றும் மனுக்களை அளித்திருந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, கோவையில் உள்ள SIT – CBCID அலுவலகத்திற்கு வழக்கின் கோப்புகள் மாற்றப்பட்டு புலனாய்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவனின் மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை காரணங்களை வெளிக்கொண்டு வர சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in