LATEST NEWS
என்னது.. கிச்சன் சிங்க் வழியா பாம்பு வருதா..? இணையத்தை உலுக்கிய வைரல் வீடியோ… ஃபேக்ட் செக்கில் வெளியான பகீர் உண்மை..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் சமையலறை சிங்க் துளையிலிருந்து பாம்பு போன்ற ஒரு விசித்திரமான உயிரி வெளியே எட்டிப் பார்ப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. ஒரு குடியிருப்பு அடுக்ககத்தின் சமையலறையில் படம்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். X தளத்தில் @imTrueIndia1 என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த பயனர்கள், அது கால்களற்ற பல்லி வகையைச் சேர்ந்த நஞ்சற்ற உயிரினமாக இருக்கலாம் என்றும், சிலர் அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஆபத்தான பாம்பு வீடியோ என்றும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்த வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ‘ஹைவ்’ போன்ற ஏஐ கண்டறியும் கருவிகள் மூலம் விரிவாக ஆய்வு செய்யப்பட்டபோது, இந்த வீடியோ 31% செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அதாவது, இணையத்தில் வைரலான இந்த வீடியோ முற்றிலும் உண்மையானது அல்ல; அது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது ஃபேக்ட் செக் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சமூக வலைதளங்களில் அதிகப் பார்வைகள், லைக்ஸ் மற்றும் கமெண்ட்களைப் பெறுவதற்காக இதுபோன்று பரபரப்பூட்டும் ஏஐ போலியான வீடியோக்களை உருவாக்கிப் பரப்பும் போக்கு அதிகரித்து வருகிறது. எனவே, இணையத்தில் உலவும் இதுபோன்ற அதிர்ச்சியளிக்கும் வீடியோக்களை உண்மைதானா என்று ஆராயாமல் உடனடியாக நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
