LATEST NEWS
அலர்ட்..! பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க..!!
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை சேர்ப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பெற்றோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பை உறுதிப்படுத்தி, அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து அரசின் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பள்ளி சேர்க்கை முதல் ஆதார் அட்டை, வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற பிறப்பு சான்றிதழ் என்பது முதன்மையானதாக கருதப்படுகிறது. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவசமாக பிறப்புச் சான்றிதழை பெற்றோர் பெறலாம். சில நேரங்களில் பெயர் வைக்காத காரணத்தால் குழந்தையின் பிறப்பை மட்டும் பதிவு செய்து பெயர் இடம்பெறாத சான்றிதழைப் பெற்றவர்கள், குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்ட பின்னர் பெயரைச் சேர்த்து புதுப்பிக்கப்பட்ட சான்றிதழைப் பெற வேண்டும்.
இதுகுறித்து பொது சுகாதார இயக்குநர் மற்றும் மாநில முதன்மை பிறப்பு, இறப்பு பதிவாளர் சோமசுந்தரம் வெளியிட்ட அறிவிப்பில், ‘27.11.2011-க்கு முன்னர் பிறந்து, பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்து, பெயர் பதியப்படாமல் இருக்கும் பதிவுகளுக்கு பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்கான இறுதியாக 26.09.2026 வரை அவகாசம் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பிறப்புச் சான்றிதழில் உங்கள் குழந்தையின் பெயரை சேர்க்க செப்.26ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கல்விச்சான்று, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தைச் சமர்ப்பித்து பெயரைச் சேர்க்கலாம்.
கிராம நிர்வாக அலுவலகம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களின் பிறப்பு இறப்பு பதிவாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் சுகாதார ஆய்வாளர்களிடம் விண்ணப்பித்து பெயரைச் சேர்க்கலாம். குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் பெயர் சேர்க்க கட்டணம் கிடையாது. 1 வருடத்திற்கு பின்னர் மற்றும் 15 வருடங்களுக்குள் என்றால், தாமதமாக பெயர் சேர்க்க ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி, தற்போது ரூ.200 கட்டணம் செலுத்தி பெற்றோர் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்து பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம். இதுவே இறுதி வாய்ப்பு என்றும், இதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
