“அடச்சீ நீங்கெல்லாம் மனுஷங்களா..?” வீட்டில் தனியாக இருந்த 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 4 காம மிருகங்களின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீங்கெல்லாம் மனுஷங்களா..?” வீட்டில் தனியாக இருந்த 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 4 காம மிருகங்களின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து, 5-ம் வகுப்பு படிக்கும் கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரைக் கொடூர கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சிறுமியின் பெற்றோர் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்றிருந்த சமயத்தில், சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு இந்த அத்துமீறல் அரங்கேறியுள்ளது. இந்தத் துயரமான சம்பவத்தில் நான்கு நபர்களுக்குத் தொடர்பு இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகத் தற்போது ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 10-க்கும் மேற்பட்ட நபர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in