CRIME
“அடக்கொடுமையே.. பிளஸ்-1 மாணவிக்குக் பிறந்த குழந்தை..” சோசியல் மீடியா காதலால் நேர்ந்த கொடூரம்.. உறைந்துபோன பெற்றோர்.. கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
கள்ளக்குறிச்சியில் பிளஸ்-ஒன் படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர் ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சக்திபாரதி என்ற 19 வயது இளைஞர், சமூக ஊடகங்கள் மூலமாக அந்த மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி, மாணவியிடம் அவர் பலமுறை அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், தற்போது அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், தங்களின் மகள் கர்ப்பமாக இருந்த விபரம் அவளது பெற்றோருக்குக் கடைசி வரை தெரியாமலேயே இருந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இளைஞர் சக்திபாரதியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும், பிள்ளைகளுடன் போதிய நேரம் செலவழித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
