LATEST NEWS
“8 வயது கனவு நனவானது.. என் கணவர், மகனுக்கு..” தளபதி விஜய் முதல்வரானதும் பெண் ரசிகை செய்த நெகிழ்ச்சி காரியம்.. உணர்வுப்பூர்வமான வைரல் பேட்டி..!!
மதுரையில் தமிழக முதலமைச்சர் விஜய்யைக் காண்பதற்காக நீண்ட நேரமாகக் காத்திருந்த பெண் தொண்டர் ஒருவர் உணர்வுப்பூர்வமாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “8 வயதில் இருந்தே விஜய்யைப் பார்க்க வேண்டும் என்பது எனது நீண்ட காலக் கனவு. அவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக எனது மகனுக்கும் கணவருக்கும் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், தாய்மாமனுக்குப் பேர் போன மதுரையில் முதலமைச்சர் விஜய் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்குவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி மற்றும் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், மக்கள் அனைவரும் சற்றுப் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “அவர் மக்களுக்குக் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார். இப்போதுதான் அவர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கிறார், எனவே மக்கள் யாரும் அவசரப்படக்கூடாது. வந்த உடனே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது” என்று அவர் மற்ற பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
