“நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்..!” மொட்டை மாடியில் வச்சு குடும்பமே செய்த கொடூர காரியம்.. 25 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்..!” மொட்டை மாடியில் வச்சு குடும்பமே செய்த கொடூர காரியம்.. 25 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தின் மதன்பூர் பகுதியில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் 25 வயது விகாஸ் குமார் என்ற வாலிபர் ஒரு வீட்டிற்குள் புகுந்தபோது, அங்கிருந்தவர்களால் பிடிபட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரும்பு கம்பிகளால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலின் போது அந்த வாலிபரின் நகங்கள் பிடுங்கப்பட்டதோடு, அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அவசரக்கால போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டது. இருப்பினும், பலத்த காயமடைந்த விகாஸ் குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக மதன்பூர் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, பிரபல நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பொறியாளர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் வர்மா, பிரதீப் குமார் வர்மா, நிகில் குமார் வர்மா மற்றும் திலீப் வர்மா ஆகிய நான்கு பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், மரணமடைந்த விகாஸ் குமார் ஓரிரு நாட்களுக்கு முன்பும் நள்ளிரவில் இதே வீட்டிற்குள் புகுந்ததாகத் தெரியவந்துள்ளது. தற்போது இக்கொலையின் பின்னணியைக் கண்டறிய போலீசார் விகாஸின் மொபைல் போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in