“DCM பதவி ஆசை காட்டி என் மூளையை சலவை செய்தார் ஆதவ்” ஆனால் நான் கொஞ்சம் கூட அசையல… உண்மையை பகிரங்கமாக உடைத்த திருமாவளவன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“DCM பதவி ஆசை காட்டி என் மூளையை சலவை செய்தார் ஆதவ்” ஆனால் நான் கொஞ்சம் கூட அசையல… உண்மையை பகிரங்கமாக உடைத்த திருமாவளவன்..!!

Published

on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மதுராந்தகம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய போது, தவெகவில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா முன்பு விசிகவில் இருந்தபோது தன்னிடம் பேசிய ரகசியங்களை மேடையில் அம்பலப்படுத்தியுள்ளார். பாஜக இல்லாத ஒரு வலுவான கூட்டணியைத் தன்னால் தனியாக உருவாக்க முடியும் என்று விசிகவில் இருந்தபோதே ஆதவ் அர்ஜுனா தன்னிடம் உறுதியளித்ததாகத் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அதிகார ஆசை வார்த்தைகளைக் கூறி ஆதவ் அர்ஜுனா தன்னைத் திசைதிருப்ப முயன்றதாகக் குற்றம் சாட்டிய திருமாவளவன், “துணை முதலமைச்சர் (DCM) ஆகலாம்” என்று கூறி ஆதவ் அர்ஜுனா தனது மூளையைச் சலவை செய்ய முயன்றார் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தவெக தரப்பிலிருந்து எவ்வளவு பெரிய ஆசை வார்த்தைகள் கூறப்பட்ட போதிலும், தான் தனது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாட்டில் இருந்து சற்றும் அசையவில்லை என்று அவர் மேடையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் தற்போதைய திமுக கூட்டணியை உடைத்தார் திருமாவளவன் என்ற களங்கம் தனது அரசியல் வாழ்க்கையில் எப்போதும் வந்துவிடக் கூடாது என்பதில் தான் மிக உறுதியாக இருந்ததாக அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ளார். சுயநல அரசியல் லாபங்களுக்காகக் கொள்கைக் கூட்டணியை விட்டுக்கொடுக்கத் தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதையும் இந்த உரையின் மூலம் தொல். திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in