“நான் சேஃபாத்தான் இருக்கேன்…” கத்தி முனையில் தந்தை பேசிய பொய்.. மகனின் ஒரு ஸ்மார்ட் ‘ஜிமெயில்’ யோசனையால் மாட்டிய கடத்தல் கும்பல்..! பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் சேஃபாத்தான் இருக்கேன்…” கத்தி முனையில் தந்தை பேசிய பொய்.. மகனின் ஒரு ஸ்மார்ட் ‘ஜிமெயில்’ யோசனையால் மாட்டிய கடத்தல் கும்பல்..! பகீர் பின்னணி..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள பட்டப்படிப்புக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரான கே.சி. குப்தா (50) என்பவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புசௌர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜகேலா கிராமத்தில் வசிக்கும் இவர், திங்கள்கிழமை மாலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு நபர்களால் கத்தி முனையில் கடத்தப்பட்டார். குற்றவாளிகள் அவரை சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள பூப்தேவ்பூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பந்திரிபானிக்கு, ஒரு வயல் வழியாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அங்கு பேராசிரியரின் கண்களைக் கட்டி, ஒரு அறையில் அடைத்து வைத்து 20 லட்சம் ரூபாய் பிணைப்பணம் கோரி மிரட்டியுள்ளனர்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று பேராசிரியர் கூறியதையடுத்து, அவரது கைபேசியைத் திறந்து ஒரு பெண்ணின் கணக்கிற்கு 1 லட்சம் ரூபாயை மாற்றுமாறு குற்றவாளிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் பசியால் உணவு கேட்டபோது, அவர்களுக்குச் சாதமும் சட்னியும் கொடுத்துள்ளனர். இதனிடையே, பேராசிரியரை அவரது குடும்பத்தினரிடம் பேச வைத்‌த குற்றவாளிகள், தான் புசௌருக்குச் சென்றுவிட்டதாகவும், தொடர்ந்து நண்பர்களுடன் சராய்பாலிக்குச் செல்வதாகவும் குடும்பத்தாரிடம் கூறுமாறு மிரட்டியுள்ளனர். கத்தி முனையில் பேராசிரியர் அவ்வாறு கூறியபோதிலும், அரைக்கால் சட்டை மற்றும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்து நடைப்பயிற்சி சென்றவர் எப்படி திடீரென சராய்பாலிக்குச் செல்ல முடியும் என்று அவரது மனைவிக்கும் மகனுக்கும் கடும் சந்தேகம் ஏற்பட்டது.

Advertisement

இதையடுத்து, பேராசிரியரின் மகன் ஏற்கனவே தனது தந்தையின் கைபேசியில் உள்நுழைந்திருந்த ஜிமெயில் கணக்கைப் பயன்படுத்தி கூகுள் மேப் மூலம் அவரது இருப்பிடத்தைக் கண்காணித்தான். தந்தை சராய்பாலியில் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அவரது கூகுள் இருப்பிடம் கிராத்மால் பகுதியில் காட்டியதால் சந்தேகம் வலுத்தது. உடனே பேராசிரியரின் மகன், அவரது மாமா, அண்டை வீட்டார் மற்றும் தந்தையின் மாணவரான தயாராம் சாவ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அன்று அந்த இடத்திற்கு நேரில் சென்றனர். குடும்பத்தினர் வருவதைக் கண்ட குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அவர்கள் பேராசிரியரைப் பத்திரமாக மீட்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜகேலாவைச் சேர்ந்த சுனில் சாரதி என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்; மேலும் அடையாளம் காணப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளியைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in