LATEST NEWS
“போலீஸா? இல்லை ரவுடிகளா..?” நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்களை வெளுத்து வாங்கிய போலீஸ்.. காக்கியின் முகத்திரையைக் கிழித்த வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் முங்கராபாத்ஷாபூர் பகுதியில், உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறிப் போலீஸார் ஒரு வீட்டிற்குள் புகுந்து சோதனையிட்டதாகவும், அங்குள்ள பெண்களைக் கொடூரமாகத் தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் போது அங்கிருந்த பெண்களின் மொபைல் போன்களையும் போலீஸார் வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதல் மற்றும் அராஜகம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகின்றன. காவலர்களின் இந்த அத்துமீறிய அநாகரிக நடத்தை குறித்துப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடுமையான கேள்விகளும், கண்டனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான முங்கராபாத்ஷாபூர் காவல் நிலையப் பொறுப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது ஜான்பூர் மாவட்டக் காவல் துறை உடனடியாக உரிய விசாரணை நடத்தி, கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
