நடுராத்திரியில் நடுக்கம்…! அலறியடித்து ஓடிய ஜோடி..அதிவேகமா போதையில் வந்து பம்பை இடித்த சொகுசு கார்… சொடக்கு போடும் நேரத்தில் சாம்பலான பெட்ரோல் பங்க்..! வைரலாகும் த்ரில்லர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடுராத்திரியில் நடுக்கம்…! அலறியடித்து ஓடிய ஜோடி..அதிவேகமா போதையில் வந்து பம்பை இடித்த சொகுசு கார்… சொடக்கு போடும் நேரத்தில் சாம்பலான பெட்ரோல் பங்க்..! வைரலாகும் த்ரில்லர் வீடியோ..!!

Published

on

கர்நாடகா – தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் அமைந்துள்ள ஹெச்பி பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மதுபோதையில் அதிவேகமாக வந்த ‘ஜாக்குவார்’ சொகுசு கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் விநியோகிக்கும் பம்ப் மீது பலமாக மோதியது.

மோதிய அடுத்த கணமே காரிலும், பெட்ரோல் பங்க்கிலும் கொழுந்துவிட்டுத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரில் இருந்த போதை ஓட்டுநர் சஞ்சய் மற்றும் அவரது பெண் தோழி அதிர்ஷ்டவசமாகத் தப்பி ஓடிய நிலையில், பங்க் ஊழியர் ஒருவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு வீரர்கள் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக போதை ஓட்டுநரைக் கைது செய்த அத்திப்பள்ளி போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in