“இடைத்தேர்தல் முடிவில் விஜய்க்கு அக்னிப் பரீட்சை…” 2 தொகுதிகளிலும் தவெக தோற்றால் ஆட்சிக்கு ஆபத்தா..? உறைந்து போன அரசியல் களம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இடைத்தேர்தல் முடிவில் விஜய்க்கு அக்னிப் பரீட்சை…” 2 தொகுதிகளிலும் தவெக தோற்றால் ஆட்சிக்கு ஆபத்தா..? உறைந்து போன அரசியல் களம்..!!!

Published

on

தமிழகத்தில் இன்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், களத்தில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம்தோல்வியைத் தழுவினால் அது முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். கடந்த சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் தவெக-விற்குக் கிடைத்த அமோக மக்கள் ஆதரவு, தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது மக்கள் மத்தியில் இல்லை என்ற ஒரு எதிர்மறையான சூழல் இந்தத் தோல்வியின் மூலம் உருவாகக் கூடும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், இந்தத் தேர்தல் முடிவு கட்சியின் அடிமட்ட அளவிலான கட்டமைப்பு மற்றும் தொண்டர்களின் பலம் எந்த அளவிற்கு வலுவாக இருக்கிறது என்ற மிக முக்கியக் கேள்வியையும் எழுப்பும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒருவேளை இந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக தோல்வியடையும் பட்சத்தில், மக்கள் மத்தியில் தவெகவிற்கான செல்வாக்கும் ஆதரவும் முற்றிலும் போய்விட்டது என்ற தீவிரமான பரப்புரையை எதிர்க்கட்சிகள் மிக வேகமாக முன்னெடுக்கத் தொடங்கும். இது வரும் காலங்களில் தவெக அரசின் மீது மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையைச் சற்றே குறைப்பதற்கான வாய்ப்பாகவும் எதிர்க்கட்சிகளுக்கு அமைந்துவிடும். இதனால், இன்று வெளியாகவுள்ள இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக-விற்கும், அதன் தலைவரான முதலமைச்சர் விஜய்க்கும் தங்களது அரசியல் செல்வாக்கையும் மக்கள் ஆதரவையும் நிரூபிப்பதற்கான ஒரு மிக முக்கியமான சோதனைக் களமாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in