LATEST NEWS
அடேங்கப்பா..! பொசு பொசுவென இருந்த லக்ஷ்மி மேனனா இது..? சமீபத்திய புகைப்படத்தை பார்த்து கிரங்கி போன ரசிகர்கள்..!
ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்த லட்சுமிமேனனை கொஞ்ச நாளாக சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை என்று சொல்லலாம். இந்நிலையில் இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் அவருக்கு உடல் எடை கூடிவிட்டது என்று செய்திகள் வெளியாகியது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் உடல் எடை அதிகரித்துள்ளதால் இயக்குனர்கள் அவரை தேர்வு செய்வதற்காக யோசிக்கிறார்கள் என்னவோ. இது ஒரு பக்கம் இருந்தாலும் இவர் இப்போது படிப்பில் மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆகையால் அவர் படிப்பு பா திக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் சினிமாவிலிருந்து தற்போது கொஞ்சம் விலகி இருக்காராம். இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் விக்ரம் பிரபுவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும்.
மறுபடியும் சினிமாவில் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் நடிகை லட்சுமி மேனன்.
உடல் எடையை கணிசமாக குறைத்து சிக்கென மாறியுள்ளார் லக்ஷ்மி மேனன். அது மாத்திரம் இல்லை, மேக்கப் இல்லாமலும் எளிமையாக உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பொசு பொசுவென இருந்த லக்ஷ்மி மேனனா இது..? என்று வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.
