கழுத்தை நெரித்து கொன்று.. இரவோடு இரவாக சடலத்தை ஆட்டோவில் போட்டு.. தேயிலை தோட்டத்தில் நடந்த பயங்கரம்… இளம்பெண் கொலையில் பகீர் கிளப்பும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

கழுத்தை நெரித்து கொன்று.. இரவோடு இரவாக சடலத்தை ஆட்டோவில் போட்டு.. தேயிலை தோட்டத்தில் நடந்த பயங்கரம்… இளம்பெண் கொலையில் பகீர் கிளப்பும் பின்னணி..!!

Published

on

தேயிலைத் தோட்டத்தில் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த நித்யா (18) என்ற இளம்பெண், கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் உள்ள பூபரா தேயிலைத் தோட்டத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலையைச் செய்ததாக இடுக்கியைச் சேர்ந்த நிஷாந்த் (19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி நித்யா மற்றும் நிஷாந்த் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது ஆத்திரமடைந்த நிஷாந்த், நித்யாவின் கழுத்தை நெரித்ததோடு மட்டுமன்றி, கல்லால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே நித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

கொலை செய்த பின்னர், அன்றிரவே நித்யாவின் உடலை ஒரு ஆட்டோவில் ஏற்றி பம்ப்ளா அணைப் பகுதிக்கு நிஷாந்த் கொண்டு சென்றுள்ளார். அங்கு எவரும் பார்க்காத வண்ணம் உடலின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து சாட்சியங்களை அழிக்க முயன்றுள்ளார். இச்சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த நிஷாந்தை காவல்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in