CRIME
அய்யோ கொடுமையே.. கோயிலுக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. பயங்கரமாக நொறுங்கிய ஈகோ கார்.. 5 பக்தர்கள் துடிதுடித்து பலி.. பெரும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில், புகழ்பெற்ற பேலான் மாதா கோயிலுக்கு ஈகோ காரில் சென்று கொண்டிருந்த பக்தர்களின் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த நெஞ்சை உலுக்கும் கொடூர விபத்தில், காரில் பயணம் செய்த 5 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான ஈகோ காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 8 பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மற்ற 3 பக்தர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
