LATEST NEWS
“இது மாதாஜியின் ஆசி…” நள்ளிரவில் வந்த ஐசியூ போன் கால்.. கர்பா ஆடையுடன் ராபிடோ பைக்கில் பறந்த சூப்பர் வுமன் டாக்டர்.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!
சூரத்தைச் சேர்ந்த மாதே மருத்துவமனையின் மருத்துவர் கல்பனா சவானி, நவராத்திரி 2026-ன் முதல் நாள் நள்ளிரவில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, பர்தோலி பகுதியைச் சேர்ந்த ஒரு நோயாளி மிகவும் ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையிலிருந்து அவருக்குத் தொடர்ச்சியான அழைப்புகள் வந்தன. ஒரு நொடியும் தாமதிக்காமல், தான் அணிந்திருந்த கர்பா ஆடையுடனேயே தனியாக ஒரு ராபிடோ பைக்கை புக் செய்து மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வந்தவுடன், ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிக்கு உடனடியாக வென்டிலேட்டர் பொருத்தி, தீவிர சிகிச்சை அளித்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட இந்தச் சிகிச்சையால் அந்த நோயாளி விரைவாகக் குணமடைந்தார்; இதனை “மாதாஜியின் உண்மையான ஆசி” என்று டாக்டர் கல்பனா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சிறு வயது முதலே தனக்குக் கர்பா நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததாகவும், ஆனால் மருத்துவப் படிப்பு மற்றும் பிஸியான பணிச்சுமை காரணமாகக் கடந்த 10-12 ஆண்டுகள் தன்னால் ஆட முடியாமல் போனதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது தனது சொந்த மருத்துவமனையைத் தொடங்கிய பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘ஷ்யாம் கர்பா’ நிகழ்வில் பங்கேற்று வருகிறார். உடற்பயிற்சிக் கூடம் அல்லது கார்டியோ பயிற்சிகளை விடக் கர்பா நடனம் ஒரு சிறந்த உடற்பயிற்சி என்று கூறும் டாக்டர் கல்பனா, தாளத்திற்கு ஏற்ப தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் நடனமாடுவது உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன், மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
