CRIME
“கால்வாயில் மிதந்த சாக்கு மூட்டை…” அவிழ்த்துப் பார்த்த போலீசாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. கணவனோடு சேர்ந்து காதலனுக்கு மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஆகாஷ் என்ற வாலிபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு பிப்ரஹ்வா கால்வாயில் வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட வாலிபரின் காதலி பூனம் தேவி மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் குப்தா ஆகிய இருவரையும் பஹ்ரைச் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், மின்சாரக் கம்பியால் கழுத்தை நெரித்து ஆகாஷ் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
கொலைக்குக் பயன்படுத்தப்பட்ட மின்சாரக் கம்பி மற்றும் சடலத்தைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட பொலிரோ வாகனம் ஆகியவற்றைத் தற்பொழுது காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்தத் துணிகரக் கொலையில் பூனம் தேவியின் இரு சகோதரர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, தலைமறைவாக உள்ள அந்த இருவரையும் பிடிக்கப் பஹ்ரைச் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்காதலால் அரங்கேறிய இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
