“என்னப்பா சொல்றீங்க… அயர்ன் பண்ணா மாசம் ரூ.1.80 லட்சமா..?” ஐடி ஊழியர்களையே கதற வைத்த வாலிபர்..! இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னப்பா சொல்றீங்க… அயர்ன் பண்ணா மாசம் ரூ.1.80 லட்சமா..?” ஐடி ஊழியர்களையே கதற வைத்த வாலிபர்..! இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ..!!

Published

on

சாதாரண உடைகளை அயர்ன் செய்து தரும் நபர்களை சிறிய வேலை செய்பவர்களாக நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. சோஷியல் மீடியாவில் ‘Two_generations_one_vlog’ என்ற கணக்கில் பகிரப்பட்ட வீடியோவில், அருண் என்ற நபர் தனது அயர்ன் தொழில் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் தலைசுற்ற வைக்கும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள பகுதியிலேயே இவருக்கு அன்றாடம் அயர்ன் செய்வதற்கான ஆடைகள் தாராளமாகக் கிடைத்து விடுகின்றன.

அருண் நாள்தோறும் சுமார் 500 துணிகளை அயர்ன் செய்கிறார். ஒரு துணிக்கு 8 ரூபாய் வீதம் கட்டணமாகப் பெறுகிறார். இதன் மூலம் இவருக்கு ஒரு நாளைக்கு மட்டும் ரூ.4,000 வருமானம் கிடைக்கிறது. கணக்கிட்டுப் பார்த்தால், மாதத்திற்கு சுமார் ரூ.1,80,000 வரை மொத்த வருமானமாக ஈட்டுகிறார். இதில் தொழில் செலவுகள் மற்றும் பிற செலவுகள் போக, மாதத்திற்கு ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை இவருக்குச் நிகர சேமிப்பாகத் தங்குகிறது. சுமார் 5 கிலோ எடையுள்ள கனமான அயர்ன் பாக்ஸைக் கொண்டு வேலை செய்வது எளிதல்ல என்றும், இது கடின உழைப்பு தேவைப்படும் தொழில் என்றும் அவர் கூறுகிறார்.

Advertisement

https://www.instagram.com/reel/Dd4N_wFvMDS/?utm_source=ig_web_button_share_sheet

இந்தத் தொழிலை அருண் தனியாக மட்டும் செய்யவில்லை. இவருடன் இணைந்து பணியாற்ற இரண்டு உதவியாளர்களை நியமித்துள்ளார். அவர்களுக்கு மாதம் ரூ.20,000 சம்பளமாகவும் வழங்கி, மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பல ஐடி ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் “நாங்கள் வாங்கும் சம்பளத்தை விட இவரின் வருமானம் மிக அதிகமாக இருக்கிறதே” என வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in