நடிகை ஜோதிகா செய்த செயல்..! கொண்டாடும் ரசிகர்கள்..! அப்படி என்ன செ ய்திருக்கிறார் நீங்களே பாருங்க..! – cinefeeds
Connect with us

Uncategorized

நடிகை ஜோதிகா செய்த செயல்..! கொண்டாடும் ரசிகர்கள்..! அப்படி என்ன செ ய்திருக்கிறார் நீங்களே பாருங்க..!

Published

on

தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகை ஜோதிகா. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார்.அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார்.

இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா.ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.“ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது.

Advertisement

அரசின் சார்பில் நன்றி” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in