LATEST NEWS
“ஐயோ அம்மா பேய்.. ஹெட்போன் மாட்டிப் பாட்டு கேட்ட ஊழியர்…” திரும்பிப் பார்த்ததும் காத்திருந்த மரண பயம்.. நெட்டிசன்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வீடியோ..!!
சீனாவில் உள்ள பழச்சாறு கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், காதில் ஹெட்போன் மாட்டி இசை கேட்டபடி கடையைச் சுத்தம் செய்வதில் தீவிரமாக மூழ்கியிருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த வாடிக்கையாளர் ஒரு பெண், ஊழியருக்குத் தொந்தரவு தராமல் அமைதியாகக் கடைக்குள் நுழைந்து அவர் எப்போது பார்ப்பார் என்று காத்திருந்துள்ளார். இசையில் லயித்திருந்த அந்த ஊழியர், தனக்குப் பின்னால் ஒரு நபர் வந்து நிற்பதைச் சற்றும் கவனிக்காமல் தனது வேலையிலேயே கண்ணும்கருத்துமாக இருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து தற்செயலாக அந்த ஊழியர் திரும்பிப் பார்த்தபோது, வெள்ளை வெளேரெனப் பேய் போலப் பெண் ஒருவர் நின்றுகொண்டிருப்பதாக நினைத்து மரண பயத்தில் அலறியடித்துள்ளார். அந்த அதிர்ச்சியில் நிலைதடுமாறி பல மீட்டர் தூரத்திற்குப் பின்னோக்கி ஓடி விழுந்தார். ஊழியரின் இந்த எதிர்பாராத விபரீத எதிர்வினையைக் கண்டு, அங்கிருந்த அந்த வாடிக்கையாளர் பெண்ணும் பயந்து நடுங்கிப் போனார். பயத்தில் அந்த ஏழை ஊழியரின் இதயமே ஒரு நிமிடம் நின்றுவிட்டது போன்ற இந்த வேடிக்கையான மற்றும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
