LATEST NEWS
“என் மகளைக் கொன்னுட்டாங்க…” காதலனுடன் சென்ற இளம்பெண் மர்ம மரணம்… கதறும் பெற்றோர்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமோஹள்ளியை சேர்ந்தவர் 23 வயதான பூமிகா. இவர் கடந்த 3-ந்தேதி தனது காதலன் கிரண் என்பவரை சந்திப்பதற்காக பெங்களூருவில் இருந்து காரில் சென்னப்பட்டணாவுக்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிற நிலையில், அவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் உயிரிழந்த பூமிகாவின் பெற்றோர், அவரது காதலன் கிரண் மீது சென்னப்பட்டணா போலீசில் பரபரப்பான புகாரை அளித்துள்ளனர். அந்த புகாரில், காரில் சென்னப்பட்டணாவுக்கு சென்ற தனது மகள் எப்படி மோட்டார் சைக்கிள் விபத்தில் இறக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர்கள், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும், காதலன் கிரணும் அவரது சகோதரர் ஆஷித்தும் சேர்ந்து பூமிகாவை தாக்கி கொன்றுவிட்டு, அதனை விபத்து போல் நாடகமாடுவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கிரணையும், அவரது சகோதரர் ஆஷித்தையும் உடனடியாக கைது செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
