CRIME
“அடைகொடுமையே.. மகனுடன் சென்ற மகிழ்ச்சிப் பயணம்.. 70 மைல் வேக ரோலர்கோஸ்ரில் தூக்கிவீசப்பட்ட கணவர்.. தரையில் நின்று கதறிய மனைவி.. பொழுதுபோக்கு பூங்காவை உலுக்கிய கொடூரம்..!!
அமெரிக்காவின் அட்லாண்டா நகரைச் சேர்ந்த 42 வயது பள்ளி ஆசிரியரான ஹசன் கரீம், சிக்ஸ் பிளாக்ஸ் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்சத ரோலர்கோஸ்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள சிக்ஸ் பிளாக்ஸ் பொழுதுபோக்கு பூங்காவில் தனது மகனுடன் சேர்ந்து ‘கோலியாத்’ என்ற அதிவேக ரோலர்கோஸ்டரில் கரீம் பயணம் செய்தபோது, எதிர்பாராதவிதமாகத் தனது இருக்கையிலிருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இந்த அதிர்ச்சியூட்டும் பயங்கரச் சம்பவத்தை அவரது மனைவியும் மகளும் தரையில் நின்றபடி நேரடியாகக் கண்டு உறைந்து போயினர்.
வழக்கின் சாட்சிகள் மற்றும் பயணிகளின் கூற்றுப்படி, இருக்கையிலிருந்து வெளியேறிய கரீம், காற்றில் தலைகீழாகப் பறந்து அந்த ரோலர்கோஸ்டர் வாகனத்தின் மீது பலமுறை பயங்கரமாக மோதியுள்ளார். மேலும் அவருக்கு இரண்டு வரிசைகள் முன்னால் அமர்ந்திருந்த ஒரு சிறுமியின் மீதும் அவர் மோதியதால் அங்கிருந்தவர்கள் மீதும் இரத்தம் சிதறியுள்ளது. இறுதியில், பூங்காவில் இருந்த ஒரு பேய் வீட்டின் கூரை மீது அவரது உடல் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிக்கு 70 மைல் வேகத்தில் செல்லக்கூடிய ஜார்ஜியாவின் மிக உயரமான இந்த கோலியாத் ரோலர்கோஸ்டர் விபத்தைத் தொடர்ந்து, சிக்ஸ் பிளாக்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தங்களின் 9 அதிவேக ராட்சத ரோலர்கோஸ்டர்களை தற்காலிகமாக உடனடியாக மூடி உத்தரவிட்டுள்ளது.
