LATEST NEWS
“குடிக்க பணம் கொடு..! தர மறுத்த மனைவி… கதவை பூட்டிக்கொண்டு விபரீத முடிவெடுத்த 32 வயது இளைஞர்..” மதுபோதையில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
ஜார்ஜண்ட் மாநிலம் கிரிடீஹ் மாவட்டத்தில் உள்ள பரகட்டா காவல் எல்லைக்குட்பட்ட கெந்துவாடீஹ் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ் விஷ்வகர்மா (32). இவருக்குக் மது அருந்துவதிலும், சூதாடுவதிலும் தீவிரமான அடிமைப் பழக்கம் இருந்துள்ளது. இவருடைய இந்தப் பழக்கத்தினால் இவருடைய குடும்பத்தினர் நீண்டகாலமாக பெரும் சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர்.
திங்கள்கிழமை இரவன்று, நரேஷ் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் சூதாடுவதற்கும் மேலும் மது அருந்துவதற்கும் தனது மனைவி அன்னு தேவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், வீட்டில் பணம் எதுவுமில்லை என்று கூறி மனைவி பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ், வீட்டின் ஒரு அறைக்குச் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டார். வெகு நேரமாகியும் அறையிலிருந்து எந்தச் சத்தமும் வராததால் சந்தேகமடைந்த மனைவி, இதுகுறித்து மாமியார்-மாமனார் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.
உடனே உறவினர்களும் பகுதி மக்களும் சேர்ந்து வீட்டின் பூட்டிய கதவை உடைத்துப் பார்த்தபோது, நரேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரகட்டா காவல் நிலையப் போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிரிடீஹ் சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
