LATEST NEWS
“அமைச்சர் சோறு தான் திங்கிறாரா..?” அங்க போய் பாருங்க.. உணவுத்துறை அமைச்சருக்கு சவால் விட்ட திமுக பிரமுகர் பரந்தாமன்..!!
தமிழகத்தில் அரிசி விலை உயரவே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் பி. வெங்கட்ராமன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் விலை உயர்வு தொடர்பாக தவறான பிம்பத்தை உருவாக்குவதாக அமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், “அமைச்சர் அரிசி போட்டுத்தான் சோறு சாப்பிடுகிறாரா?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமைச்சரின் சொந்தத் தொகுதியான மயிலாப்பூருக்கே நேரில் சென்று, அங்குள்ள ஒவ்வொரு கடையிலும் நிலவரத்தை விசாரிக்கத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.
உண்மையில் சில்லறை சந்தையில் அரிசி விலை கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 27 வரை உயர்ந்துள்ளதாகவும், இதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
