CRIME
“காலையிலேயே அரங்கேறிய பயங்கரம்.. பைக் அடியில் திடீரென புகுந்த நாய்..” அடுத்த நொடியே வாலிபருக்கு நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் திடீரென நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி விழுந்து, பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரதாப் மார்க்கெட் பகுதியில் இன்று காலை சுமார் 7:30 மணியளவில் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபத்து நிகழ்ந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் வண்டியின் அடியில் வந்ததால் வாலிபர் நிலைதடுமாறி தார்ச்சாலையில் விழுந்ததும், பின்னால் வேகமாக வந்த லாரி அவரது தலையின் மீது ஏறியதில் அவர் அங்கேயே பலியானதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சஹாரன்பூர் போலீசார், உயிரிழந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை (Bike Number) வைத்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, விபத்தில் பலியான வாலிபரின் அடையாத்தைக் கண்டறிந்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
