“நான் ஒடிப் போகல, அவர் தற்கொலைதான் பண்ணார..” நேபாள எல்லையில் சிக்கிய மாடல் அழகியின் புதிய வீடியோ.. ஷிவா சர்மா மரண வழக்கில் வெளியாகும் அதிரடித் திருப்பங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் ஒடிப் போகல, அவர் தற்கொலைதான் பண்ணார..” நேபாள எல்லையில் சிக்கிய மாடல் அழகியின் புதிய வீடியோ.. ஷிவா சர்மா மரண வழக்கில் வெளியாகும் அதிரடித் திருப்பங்கள்..!!

Published

on

லக்னோவைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவா சர்மாவின் மரண வழக்கின் முக்கிய சந்தேக நபரான மாடல் ஸ்ரத்தா துபேயின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 9 அன்று லக்னோவில் உள்ள அவாத் கிரீன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து விழுந்து ஷிவா சர்மா உயிரிழந்ததைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள ஸ்ரத்தாவை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. இந்நிலையில், ஸ்ரத்தா தனது சகோதரி ரஷ்மி மற்றும் ஓட்டுநருடன் ஸ்கார்பியோ காரில் பஹ்ரைச் பகுதிக்குச் சென்று, எல்லைக்கு அருகே காரை நிறுத்திவிட்டு நேபாள எல்லைக்குள் தப்பிச் சென்றுள்ளார்.

நேபாளத்தின் மஹிம் நகர் பேருந்து நிலையம் அருகே அக்டோபர் 10 காலை 6:30 மணியளவில் எடுக்கப்பட்ட இரு சிசிடிவி காட்சிகளில், ஸ்ரத்தா துபே தனது சகோதரி மற்றும் ஓட்டுநருடன் சாலையைக் கடப்பதும், பின்னர் அவர்களுடன் மற்றுமொரு நபரும் சேர்ந்து ரிக்ஷாவில் பயணிப்பதும் பதிவாகியுள்ளது. இந்த புதிய ஆதாரங்கள் மூலமாக நேபாளத்திற்குள் ஸ்ரத்தா துபே மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கியிருக்கும் இடங்கள் மற்றும் அவர்களின் நகர்வுகளைக் கண்டறியத் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

இதனிடையே, தலைமறைவாக இருக்கும் சூழலிலும் ஸ்ரத்தா துபே சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தான் ஒடிப் போகவில்லை என்றும், தொழிலதிபர் ஷிவா சர்மா தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும், இந்த விவகாரத்தில் தனது தரப்பு நியாயத்தையும் விளக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், நேபாளத்தில் அவர் இருக்கும் இடத்தை உறுதிசெய்து, ஷிவா சர்மாவின் மரணம் தொடர்பான உண்மைகளைக் கண்டறிய காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in