CRIME
வேகத்தடையில் காத்திருந்த மரணம்.. போலீஸ் அதிகாரிக்கும் அவரது மகளுக்கும் நேர்ந்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
பெலகாவி மாவட்டம் நிப்பாணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் நிப்பாணி நகர் காவல் நிலையத் தலைமைக் காவலர் புண்டலிக் ஹட்டி (50) மற்றும் அவரது மகள் நிகிதா (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக ஸ்தம்பித்து பின்னர் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிய சில நிமிடங்களில் இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
மோதலின் வீரியத்தால் சாலையில் தூக்கி வீசப்பட்ட தந்தை மற்றும் மகள் மீது லாரி ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். நிப்பாணி நகர் காவல் நிலைய எல்லையில் நடந்த இத்துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
