LATEST NEWS
கடலா? இல்லை ஆப்பிள் ஷோரூமா? “கடலில் மிதக்கும் ஆயிரக்கணக்கான ஐபோன்கள்” அள்ளிச்செல்லும் பொதுமக்கள்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!
ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நிகழ்ந்த பரபரப்பான கப்பல் விபத்தைத் தொடர்ந்து, பரபரப்பான கப்பல் விபத்தைத் தொடர்ந்து, கடலில் மிதக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அள்ளிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. துபாயிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நைஜீரியா நோக்கிச் சென்ற சிங்கிப்பூர் கொடியுடைய ‘ஜிஎப்எஸ் பிரைட்’ (GFS Pride) என்ற பிரம்மாண்ட சரக்குக் கப்பல், இப்பகுதியில் திடீரென ஏற்பட்ட ஏவுகணை அல்லது கடற்படை கண்ணிவெடி தாக்குதலால் தீப்பிடித்து கடலில் மூழ்கியது.
இந்த விபத்தின்போது கப்பலில் இருந்த 21 ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கப்பல் முழுமையாகக் கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. இதனால், கப்பலில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர்கள் உடைந்து, அவற்றுள் இருந்த ஆயிரக்கணக்கான புத்தம் புதிய ஐபோன்கள் , லேப்டாப்கள் மற்றும் விலைமதிப்பற்ற சர்வதேச பிராண்டுகளின் வாசனை திரவியங்கள் பெட்டி பெட்டியாகக் கடல் நீரில் மிதக்கத் தொடங்கின.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சிறிய ரகப் படகுகளில் விரைந்து வந்த உள்ளூர் மீனவர்களும் பொதுமக்களும், கடலில் மிதந்த ஐபோன் பெட்டிகளையும் வாசனை திரவியங்களையும் போட்டிப்போட்டு அள்ளித் தங்களது படகுகளில் நிரப்பினர். கடல் பரப்பில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு மிதக்கும் இந்த ஆடம்பரப் பொருட்களின் அட்டைப் பெட்டிகளை மக்கள் வலைகள் மற்றும் கைகளின் உதவியுடன் அள்ளிச் செல்லும் இந்த விசித்திரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் வைரலாகி வருகின்றன.
