LATEST NEWS
“இது என்னடா கூத்து… மீன்களுக்குப் பதிலாக ஐபோனா..?” கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய பல கோடி ரூபாய் அதிர்ஷ்டம்.. நெஞ்சை அதிரவைக்கும் வீடியோ..!!
ஹார்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதைத் தொடர்ந்து, அந்தப் கடற்பகுதியில் ஈரானிய மீனவர்கள் ஐபோன்களை வலைவீசிப் பிடிக்கும் அதிர்ச்சியூட்டும் மற்றும் விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் துபாயில் இருந்து புறப்பட்ட ‘ஜிஎஃப்எஸ் பிரைட்’ என்ற கண்டெய்னர் கப்பல், கடந்த அக்டோபர் 14 அன்று திடீரென கடலில் மூழ்கியது. இந்த விபத்தின் போது கப்பலில் 2,500-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் இருந்தன. இவற்றில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய மாடலான பல்லாயிரக்கணக்கான ஐபோன் 18 ரக போன்களும், விலைமதிப்பற்ற பிரெஞ்சு வாசனைத் திரவியங்களும் இருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் வெடித்த மோதல்களுக்குப் பிறகு, இந்த வழித்தடம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், கடந்த 24 மணி நேரத்திற்குள் மூழ்கும் இரண்டாவது கப்பலாகவும், மோதல்கள் தொடங்கியதில் இருந்து கடலில் மூழ்கும் மூன்றாவது பெரிய கப்பலாகவும் இந்த ‘ஜிஎஃப்எஸ் பிரைட்’ பதிவாகியுள்ளது. கடலில் மிதக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன் பெட்டிகளை மீனவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது படகுகளில் அள்ளிச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது உலகளவில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
