அடப்பாவி..! ஐபோனுக்காக இப்படியா..? 15 மீட்டர் தூரம் ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கடைக்காரர்.. சினிமா காட்சிகளையே மிஞ்சிய திருட்டுச் சம்பவம்..! பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவி..! ஐபோனுக்காக இப்படியா..? 15 மீட்டர் தூரம் ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கடைக்காரர்.. சினிமா காட்சிகளையே மிஞ்சிய திருட்டுச் சம்பவம்..! பகீர் வீடியோ..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பி.ஆர்.எஸ். நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு மொபைல் கடைக்கு வந்த நபர் ஒருவர், புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் செல்போனை வாங்குவது குறித்து விசாரித்துள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்த அந்த நபர், போனை உன்னிப்பாகப் பார்ப்பது போல் நடித்துவிட்டு, திடீரென அதனை தனது சட்டிகுள்ளே மறைத்து வைத்துவிட்டு கடையில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தார்.

கடைக்காரர் மீத் என்பவர் சுதாரித்துக்கொண்டு உடனடியாக அவரைப் பிடிக்கப் பின்னால் ஓடினார். அப்போது கடமைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆக்டீவா ஸ்கூட்டரில் தப்பிக்க முயன்ற அந்த திருடனின் ஸ்கூட்டர் பின்னைப் பகுதியை மீத் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். திருடன் ஸ்கூட்டரை வேகமாக இயக்கவே, பிடியை விடாமல் போராடிய கடைக்காரர் மீத் சாலையில் சுமார் 10 முதல் 15 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.

Advertisement

இந்தத் திகைப்பூட்டும் மற்றும் பரபரப்பான காட்சிகள் அனைத்தையும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. ஸ்கூட்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது திருடன் அந்த ஐபோன் மற்றும் ஸ்கூட்டர் இரண்டையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டான். கடைக்காரருக்கு காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டாலும், இறுதியில் விலை உயர்ந்த அந்த ஐபோன் மீட்கப்பட்டு, கைவிடப்பட்ட ஸ்கூட்டர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in