CRIME
பாத்ரூமுக்குள் இருந்த மர்மப் பெட்டி… உற்றுப் பார்த்த பெண்ணுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. வாலிபர்கள் செய்த பகீர் மோசடி.. கதிகலங்கிப்போன குடும்பம்.. திடுக்கிடும் பின்னணி..!!
சென்னை அண்ணா நகர் கிழக்கில் உள்ள ஒரு வீட்டில், குழந்தை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் அங்குள்ள கழிப்பறையில் ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கழிப்பறையில் இருந்த ஒரு துளையிடப்பட்ட பெட்டிக்குள் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருந்ததை அப்பெண் தற்செயலாகக் கவனித்துள்ளார். இதுகுறித்து அவர் உடனடியாக வீட்டு உரிமையாளரான லலித்குமாரிடம் தெரிவிக்க, அவர் அளித்த புகாரின் பேரில் அண்ணா நகர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
காவல்துறையினரின் விசாரணையில், அதே வீட்டில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சுகுமார் தாண்டி மற்றும் அசோக் குமார் யாதவ் ஆகிய இருவரே இந்த அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இவர்கள் இருவரும் அந்தப் பெண்ணை ரகசியமாகப் படம் பிடித்ததோடு மட்டுமல்லாமல், அவரது பெயரில் ஒரு போலி சமூக வலைதளக் கணக்கையும் தொடங்கி இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த செல்போன்களைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
