LATEST NEWS
வேணாம்பா சாமி…! சசிகலா, டிடிவியை விட அந்த 2 பேர் ரொம்ப முக்கியம்… தொகுதி செல்வாக்கிற்கு அடிபணிந்து இறங்கி வரும் இபிஎஸ்.? அதிரடி திருப்பம்..!
அதிமுகவில் ஒன்றிணைப்பு கோஷம் மீண்டும் வலுவாகத் தலைதூக்கியுள்ள நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய உள்கட்சி நெருக்கடிகள் உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இம்முறை கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் மற்றும் வி.கெ. சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்ப்பது மட்டுமல்லாமல், தற்போது கட்சிக்குள் இருக்கும் முக்கிய மூத்த நிர்வாகிகளையே தக்கவைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி கடுமையாகப் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி (SPV) மற்றும் சி.வி. சண்முகம் (CVS) போன்ற கட்சியின் அசைக்க முடியாத தூண்களாகக் கருதப்படும் தலைவர்கள், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் வெளிப்படையாகவே வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற அரசியல் கலகங்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சிக்கு மத்தியில், கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் கட்சியின் வாக்கு வங்கியைத் தக்கவைக்க இந்த ஒன்றிணைப்பு அவசியம் என்று இந்தத் தலைவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.
டிடிவி தினகரன், சசிகலா, எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆகியோரின் தொகுதி வாரியான மற்றும் சமூக ரீதியான செல்வாக்கை எடப்பாடி பழனிசாமி புறந்தள்ள முடியாது என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தென் மாவட்டங்களில் சசிகலா மற்றும் தினகரனின் முக்குலத்தோர் வாக்கு வங்கியும், கொங்கு மண்டலத்தில் வேலுமணியின் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூக செல்வாக்கும், வட மாவட்டங்களில் சிவி சண்முகத்தின் வன்னியர் சமூக வாக்குகளும் அதிமுகவின் வெற்றிக்கு மிக முக்கியமானவை என்பதால், இவர்களின் செல்வாக்கைக் கவனத்தில் கொண்டு இபிஎஸ் தனது அடுத்தகட்ட அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
