“அடக்கடவுளே..! காணாமல் போன நபர் காட்டில் பிணமாக மீட்பு..” டிஜே சத்தப் பிரச்சினைக்காக பக்கத்து வீட்டுக்காரரே செய்த கொடூரம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடக்கடவுளே..! காணாமல் போன நபர் காட்டில் பிணமாக மீட்பு..” டிஜே சத்தப் பிரச்சினைக்காக பக்கத்து வீட்டுக்காரரே செய்த கொடூரம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

Published

on

கிரேட்டர் நொய்டாவின் எகோடெக் 3-வது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலேசரா கிராமத்தைச் சேர்ந்த பவன் சர்மாவுக்கும், அவரது அண்டை வீட்டாரான லலித் சர்மாவுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு டிஜே இசையை அதிக சத்தத்தில் வைத்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை மாலை மது குடிக்க அழைப்பது போல் பவன் சர்மாவை லலித் சர்மா தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் பவன் சர்மா வீடு திரும்பாததால், கவலையடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடிப் பார்த்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வியாழக்கிழமை காலை சூரஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லக்னாவலி கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ஒரு நபரின் சடலம் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த காவல்துறையினர், அது பவன் சர்மாவின் உடல் என்பதை உறுதிசெய்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். காரில் அமர்ந்து இருவரும் மது அருந்தியபோது, பழைய தகராறு குறித்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த லலித் சர்மா, பவன் சர்மாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலைக் காட்டுப் பகுதியில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த குற்றவாளி லலித் சர்மாவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in