“மர்ம மரணம்..! பலமுறை கூப்பிட்டும் திறக்காத கதவு… ஜன்னல் வழியே பார்த்தபோது உறைந்துபோன நண்பர்கள்..! ஹாஸ்டல் அறையில் பிசிஏ மாணவன் நேர்ந்த கொடூரம்… கதறடிக்கும் பின்னணி என்ன..?!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மர்ம மரணம்..! பலமுறை கூப்பிட்டும் திறக்காத கதவு… ஜன்னல் வழியே பார்த்தபோது உறைந்துபோன நண்பர்கள்..! ஹாஸ்டல் அறையில் பிசிஏ மாணவன் நேர்ந்த கொடூரம்… கதறடிக்கும் பின்னணி என்ன..?!”

Published

on

கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பிசிஏ முதலாமாண்டு படித்து வந்த 21 வயதான நிஷாந்த் ஷாக்யா என்ற மாணவர், ஹாஸ்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், நாலேஜ் பார்க் பகுதியில் உள்ள ஒரு ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தார். சம்பவத்தன்று காலை அவரது அறை நண்பர் வெளியே சென்றுவிட்டு திரும்பியபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. பலமுறை கூப்பிட்டும் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது நிஷாந்த் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக ஹாஸ்டல் நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், த தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தேவையான ஆதாரங்களைச் சேகரித்தனர். இருப்பினும், அறையில் இருந்து எந்தவொரு தற்கொலைக் குறிப்பும் (Suicide Note) கண்டெடுக்கப்படவில்லை.

Advertisement

காவல்துறையினர் விசாரணைக்காக மாணவரின் மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. மாணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் குடும்பத்தினரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதவி கமிஷனர் கிருஷ்ண பால் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in